Print this page

ரசிகரின் காலணிகளை கையில் எடுத்த விஜய்!

September 27, 2020

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு நடிகர் விஜயைக் கண்ட அவரது ரசிகர்கள் உடனடியாக அவரை சூழந்து கொண்டனர்.

இதனையடுத்து பொலிஸார் பாதுகாப்பில் நடிகர் விஜய் அழைத்துச்செல்லப்பட்டார். அந்த சமயத்தில் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அந்த சூழ்நிலையில், காவல்துறையினர் விஜயை பாதுகாப்பாக வெளியே அழைத்துச்செல்ல முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் ரசிகர்கள் சிலர் கீழே விழுந்தனர்.

அப்போது கீழே விழுந்த ரசிகர்களின் காலணிகளை விஜய் தாமாக முன் வந்து எடுத்துக்கொடுத்த சம்பவம் ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.