Print this page

தனிமையில் கூடிய இளைஞர், யுவதிகள் கைது

September 27, 2020

காலி, தெலிகட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை நண்பர்கள் நடத்திய விருந்து ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 5 லட்சம் ரூபாய் பெறுமதியான போதை பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் பெண்கள் உட்பட 9 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெலிகட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 160000 ரூபாய் பெறுமதியான 40 போதை உருண்டைகள், 150000 ரூபாய் பெறுமதியான 20 போதை மாத்திரைகள், 200000 ரூபாய் பெறுமதியான ஹேஷ் மற்றும் எம்.டீ.எம் என்ற போதை பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கண்டி மற்றும் கொழும்பை சேர்ந்த 25 - 30 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் சுற்றிவளைக்கும் போது அவர்கள் அனைவரும் போதை பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்ததாக பொலிஸார் ரெிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், கையடக்க தொலைபேசி ஊடாக நண்பர்களாகி இந்த விருந்தினை ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.