Print this page

20துக்கு எதிர்த்து 20 மனுக்கள் தாக்கல்!

September 28, 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய இளைஞர் சக்தி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க உட்பட மேலும் இரு மனுக்கள் 20ஆவது திருத்த யோசனைக்கெதிராக  இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுவரை புதிய அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு எதிராக 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் இன்று மனு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், புதிய அரசியலமைப்பத் திருத்த யோசனைக்கு எதிராக மனுக்களை முன்வைப்பதற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம் நாளை செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.