Print this page

சுகாவும் குழுவை நியமித்தது

September 28, 2020

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபினை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.

குறித்த குழுவின் பரிந்துரைகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர். நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, அமைச்சர். மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இராஜாங்க துமிந்த திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, நாடாளுமன்ற உறுப்பினர் சாரதீ துஷ்மந்த, சங்ஜய கமகே, கலாநிதி ஷமில் லியனகே ஆகியோர் குறித்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.