Print this page

பிரபல நடிகர் விடைபெற்றார்

September 28, 2020

இலங்கையின் சிங்களத் திரையுலகின் பிரபல்யமான நடிகர் டெனிசன் குரே காலமானார்.

கடந்த வாரத்திலிருந்து சுகயீனமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று பகல் காலமானார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காலமானபோது அவருக்கு 68 வயதாகின்றது.