Print this page

மலிக் மீது விசாரணை ஆரம்பம்

September 28, 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

நல்லாட்சி அராசங்கத்தின் ஊழல் மோசடி தடுப்பு குழுவின் உறுப்பினர் ஒருவர்  பதிவு செய்துள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்  மலிக் சமரவிக்ரம ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.