Print this page

பிக்பாஸ் குறித்து பிரபல நடிகை பளீர்

September 28, 2020

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை லட்சுமிமேனன் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் பரவியது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை. 

அங்கு பிறர் சாப்பிட்ட தட்டுகளை கழுவவும், மற்றவர்கள் பயன்படுத்திய கழிவறையை சுத்தம் செய்யவும் செல்ல போவதில்லை. மேலும் நிகழ்ச்சி என்ற பெயரில் கேமரா முன்பு நின்று சண்டை போடவும் போவதில்லை. இதற்கு பிறகாவது நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக பரப்பும் செய்திகளை நிறுத்துவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இதனை கண்டு ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.