Print this page

39 மனுக்கள் மீதான விசாரணை இன்று

September 29, 2020

20ஆவது திருத்த யோசனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக இன்று நடைபெறவுள்ளது.

அரசியலமைப்பு திருத்த சட்டவரைபுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைகின்றது.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டவரைபினை, நீதி அமைச்சர் அலி சப்ரி கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதன்படி குறித்த சட்டவரைபுக்கு ஆட்சேபனைதெரிவித்து மனுதாக்கல் செய்வதற்கான கால எல்லையாக 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.