Print this page

விரைவில் நடிகரை மணக்கும் பிரபல நடிகை

September 29, 2020

மலையாளத்தில் ஓமர் லுலு இயக்கத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஒரு அடார் லவ்.

இப்படம் பிரியா வாரியாரின் புருவத்தை தூக்கி கண்சிமிட்டும் காட்சியால் பெருமளவில் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் வெளியானது.

ஒரு அடார் லவ் திரைப்படத்தில் பயாலஜி டீச்சராக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரோஷ்னா அன் ராய். இவர் இந்தப் படத்தை தொடர்ந்து பாபம் செய்யதவர் கேளறியட்டே, சுல், தமாக்கா உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரோஷ்னா அன்ராயும், அங்கமாலி டைரிஸ் மற்றும் தண்ணீர் மதன் தினன்கள் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கிச்சு டெல்லசும் காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அதனை இருவரும் அப்பொழுது உறுதிப்படுத்தவில்லை.

தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து
நடிகை ரோஷ்னா அன் ராய் தனது சமூக வலைதளப் பக்கத்தில், எங்கள் திருமணத்தை முறைப்படி அறிவிக்கும் நேரம் இது.

இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது. உண்மையான காதலுடன் என்னை மனதார நேசித்த கிச்சுவுக்கு நன்றி என பதிவிட்டு இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.