Print this page

விழுந்த மாடியின் உரிமையாளருக்கு விளக்கமறியல்

September 30, 2020

கண்டி, பூவெலிகட பகுதியில் ஐந்து மாடி வீடொன்று கடந்த வாரம் தாழிறங்கியதில் மூவர் உயிரிழந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டின் உரிமையாளரான அநுர லெவ்கே, பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் இன்று பிற்பகல் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.