Print this page

மைத்திரிக்கு எதிராக CIDஇல் முறைப்பாடு

September 30, 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று மாலை முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பிரதிஷ்டைக் குழுத் தலைவர் சிரந்த அமரசிங்க இதனைத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து இந்த முறைப்பாடு செய்யப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.