Print this page

தமிழ்க் கட்சிகள் ஆராய்வு!

தியாகி திலீபன் நினைவேந்தல் விவகாரத்தை அடுத்து ஒன்றிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள், தமது அடுத்த கட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று புதன்கிழமை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் கூடின. 

யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்தக் கூட்டம் இடம் பெற்றது.

திலீபனின் நினைவு நிகழ்வுக்கு அரசு பல்வேறு தடைகளை விதித்தது. இதன் காரணமாக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள 10 கட்சிகள் இணைந்து இதனை எதிர்க்கத் தீர்மானித்தன.

இவ்வாறு இணைந்த கட்சிகள் ஒன்றித்து அண்மையில் கதவடைப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியப் பரப்பில் அடுத்த கட்டமாக எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் பத்துக் கட்சிகளும் நேற்று கூடி கலந்துரையாடின