Print this page

ரணிலிடம் அறிக்கை கையளிக்கப்படும் நாள் அறிவிப்பு

ஐக்கிய தேசியக்கட்சியை மீண்டும் ஒழுங்கமைக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, அடுத்த வாரம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், தலைமை நிர்வாக அதிகாரி சமல் சேனாரத், முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் சீனாவின் முன்னாள் தூதுவர் கருணசேன கொடிதுவக்கு ஆகியோர் அடங்கிய குழு உறுப்பினர்கள் இந்த அறிக்கையைத் தயாரித்து வருகின்றனர்.

குறித்தக் குழுவை துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன மேற்பார்வையிடுகிறார்.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்கள் அர்ஜுனா ரணதுங்கா, முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஷு மாரசிங்க மற்றும் சந்தித் சமரசிங்க ஆகியோரிடமிருந்தும் பரிந்துரைகளைப் பெறுமாறு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க,  குழுவிடம் அறிவுறுத்தியுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.