Print this page

ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி கூட்டம்

ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மற்றும் நாடாளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.