Print this page

67 இலங்கையர்கள் வெளிநாடுகளில் பலி

கொவிட்-19  காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் 67 இலங்கையர்கள் பலியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சவுதி  அரேபியா, கட்டார் ,குவைத் ,ஓமான் உட்பட 17 நாடுகளில் இருந்தே இந்த மரணங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன என பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

2,600 மேற்பட்ட புலம்பெயர் இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.