Print this page

புத்தக கண்காட்சிக்கு வந்தவருக்கு கொரோனா

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு தனியாக வந்தவருக்கு கொரோனா ​தொற்றியுள்ளமை உறுதியானது.

அவர், செப்டெம்பர் 23ஆம் திகதியன்றே, புத்தகக் கண்காட்சிக்கு வருகைதந்துள்ளார்.

அவர், புறக்கோட்டை பஸ் நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் ஆகியவற்று அன்றையதினம் சென்றிருக்கின்றார்.

அவர், செப்டெம்பர் 30ஆம் திகதியன்று நுவரெலியாவுக்கும் சென்றுள்ளார். 36வயதான அந்த நபர், சிலாபத்திலுள்ள தன்னுடைய வீட்டில் வைத்தே, கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.