Print this page

124 கொரோனா நோயாளர்கள் பதிவு

இலங்கையில் நேற்று (11) மாத்திரம் 124 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் 121 பேர், ஓமானில் இருந்து வந்த ஒருவர் மற்றும் குவைட்டில் இருந்து வந்த இருவர் உள்ளடங்குகின்றனர்.

இதனையடுத்து, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1307 ஆக அதிகரித்துள்ளது.