Print this page

135 பேர் இதுவரை கைது

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 135  பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த நான்காம் திகதி முதல் இன்று காலை ஆறு மணிவரையான காலப்பகுதியிலேயே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 37 வாகனங்கள்  இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.