Print this page

சஜித்தை அழைத்த ஆணைக்குழு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினாலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமூர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, சஜித் பிரேமதாசவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்,மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூஃப் ஹக்கீம், சரத் பொன்சேகா, மலிக் சமரவிக்ரம மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோருக்கும்  குறித்த தினத்தில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.