ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லவாய - பேரகல வீதியில் பேரகல நோக்கிய பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து 500 மீற்றர் ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி, பெண் மற்றும் குழந்தை ஆகிய மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஹல்துமுல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 1 1/2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
ஏனையவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.