Print this page

நாடு முழுதும் மீண்டும் ஊரடங்கு சட்டமா?

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை காலை கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கட்டுநாயக்க பகுதியில் இன்று அதிகாலை 5 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பதாகவும், கடந்த 03 வாரங்களில் 142 பேர் ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் கைதாகியிருப்பதாகவும் கூறினார்.