Print this page

ஊரடங்கு சட்டம் குறித்து இராணுவ தளபதியின் கருத்து

நாடு முழுவதும் ஊடரங்குச் சட்டத்தினை அமுல்படுத்தப்படமாட்டாது என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த வர்த்தக நிலையங்களை இன்று காலை 8.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை திறந்து வைக்க முடியும் என இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.