கொரோனா சட்டம் பாராளுமன்றத்தைத் தவிர்ந்த வெளிப்புற இடங்களுக்கு மாத்திரம் பொருந்தும் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைச் சபையில் வெளிப்படுத்த விரும்பினால் முகக்கவசம் அணியாமல் தங்களின் கருத்துக்களை முன்வைக்கலாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
சபாநாயகர் பாராளுமன்றத்தில் முகக்கவசம் அணிவது அவசியமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாச பாராளுமன்றத் தில் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.