Print this page

முன்னாள் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பூகொடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட 08 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.