Print this page

109 பேருக்கு புதிதாக தொற்றிய கொரோனா

இன்று (21) இதுவரையான காலப்பகுதியில் 109 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 49 பேர் பேலியகொடை மீன்சந்தை ஊழியர்கள், 37 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள், 23 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை 5920ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 2406பேர் வைத்தியசாலைகளில் உள்ளதுடன், 3501 பேர் குணமடைந்துள்ளனர்.

Last modified on Wednesday, 21 October 2020 11:59