Print this page

20க்கு சுதந்திரக் கட்சி ஆதரவு


நாளைய தினம் வாக்கெடுப்பின்போது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் என, கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளிள் மத்திய செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர், நாரஹேன்பிட்டி அபேராமய விகாரையில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அபேராமய விகாரையின் விகாராதிபதி முருதொட்டுவாவே ஆனந்த தேரர் மற்றும் எல்லே குணவன்ஸ தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தின் பிரதிநிதிகளும் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அரசமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் தயாசிறி இதனைக் கூறினார்