Print this page

நாடு முழுமையாக முடக்கமா?


நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு முழுவதும் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்தல் மற்றும் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தல் போன்ற எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் வர்த்தக நிலையங்களுக்கு சென்று அதிகளவான பொருட் கொள்வனவில் ஈடுபடுவதை தவிர்த்து செயற்படுமாறு இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.