Print this page

மனோ அதிரடி: அரவிந்தவுக்கு கோவிந்தா

தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் எம்.பியை இடைநிறுத்தியுள்ளேன். இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ள தமுகூ பாராளுமன்ற குழு இது தொடர்பில் ஆராயுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலை​வர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அரவிந்தகுமார் தொடர்பான மேல்நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணியிடம் கேட்டுக் கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பிக்கள் எதிர்த்து வாக்களித்தனர். எனினும், அ.அரவிந்தகுமார் மட்டும் ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.