Print this page

மினுவங்கொட கொரோனா 4,400 ஆக அதிகரிப்பு

இலங்கையில் இதுவரையில் 7,875 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் 351 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது.

அவர்களுள் பெரும்பாலானோர் பேலியகொட மீன் சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்களுள் பிலிபைன்ஸ் நாட்டு கடற் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மற்றும் கட்டார் நாட்டவர் ஒருவரும் உள்ளடங்குதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 3,803 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 4,057 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று (26) காலை வரையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,400 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 3,359 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.