Print this page

MCC வந்தால் விலகுவேன்




அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகிற எந்த அரசாங்கத்திலும் தாம் இருக்கப்போவதில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் இதில் பேசிய அமைச்சர் வீரவன்ச, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின்போது எம்.சி.சி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என்று கூறினார்.

அதனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது தமக்கு அதீத நம்பிக்கை இருப்பதாகவும், ஆகவேதான் பொம்பியோவின் இலங்கை விஜயத்தை தாம் முன்புபோல எதிர்க்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Last modified on Thursday, 29 October 2020 13:13