Print this page

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் இன்று தீர்மானம்

November 01, 2020

மேல் மாகாணத்தில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை நீக்குவது குறித்து, கொவிட் தொற்றுப் பரவலை ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த மாகாணத்தில் கடந்த 29ம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலானது. இதனை நாளை அதிகாலை 5.00 மணிக்கு நீக்குவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், கிடைக்கும் அறிக்கைகளை முறையாகப் பரிசீலித்த பின்னரே உறுதியான தீர்மானத்தை எட்ட முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் ஆங்காங்கே தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள்.

இந்தத் தொற்று மேலும் பரவக்கூடுமா என்பதை அவதானிக்க வேண்டுமென்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் கூறினார்.