Print this page

'எரிப்பது ஜனாஸாக்களை அல்ல; முஸ்லிம்களின் உள்ளங்களை'

November 03, 2020

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யக்கோரியும் 

 கொரோனா வைரஸ் காரணமாக  மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்தக் கோரியும் மன்னார் பஸார் பகுதியில் நேற்று (02) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ்தொற்று காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின், ஜனாஸாக்களை  எரிப்பதை நிறுத்த வேண்டும் என்றும்  'முஸ்லிம் நாடாளுமன்ற ஜனாஸாக்களே உங்களுக்கு முதுகெலும்பு இருக்கின்றதா?' 

'நீங்கள் மௌனிகளாக இருப்பதைவிட இறக்கலாம்' 'நீங்கள் எரிப்பது உடலை அல்ல' உலக முஸ்லிம்களின் உள்ளத்தை'  போன்ற பல்வேறு வாசகங்களை அடங்கிய தாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திநின்றனர்.