Print this page

பொலிவியான் பெண்ணுக்கு மரண தண்டனை

February 27, 2019


2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் 13 ஆம் திகதியன்று 2 கிலோ 615 கிராம் கொக்கைன் போதைப்பொருடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட பொலிவியான் (வயது 50) பெண்ணுக்கு, நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டை அப்பெண், நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டுள்ளார். அதனையடுத்தே, அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.