Print this page

மூடப்பட்ட கல்வி அமைச்சு இன்று மீளத்திறப்பு

November 05, 2020

கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கல்வி அமைச்சு இன்று வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்தது.

கல்வி அமைச்சின் இசுருபாய கட்டடம் நேற்றுமுன்தினம் தற்காலிகமாக மூடப்பட்டது. கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.