Print this page

12 ​ஆம் திகதி அதிரடி மாற்றம்: அரசாங்கம் முடிவு

November 07, 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில், மாற்றமொன்று ஏற்படவிருப்பதாக வெளியான தகவல்களின் பிரகாரம் அந்த மாற்றம் 12ஆம் திகதியன்று இட​ம்பெறக் கூடுமென அறியமுடிகின்றது.

அதற்காக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பி​யொருவர் தன்னுடைய எம்.பி பதவியை, இராஜினாமா செய்யவிருக்கின்றார்.

அவருடைய வெற்றிடத்துக்கே, புதியவர் எம்.பியாக பதவியேற்பார் என்றும் அதற்கான வழிவகைகளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தம் வழிவகுத்துவிட்டதென அறியமுடிகிறது. எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டதன் பின்னர், முக்கிய அமைச்சுப் பொறுப்பொன்று அவருக்கு வழங்கப்படவுள்ளதென அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல விவகாரம் சூடுபிடித்திருந்த போது, தன்னுடைய கட்சியின் தலைவரால் தாக்குதல்களுக்கு உள்ளானதாகக் கூறப்பட்டவரே இராஜினாமா செய்யவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.