Print this page

கொழும்பில் கொல்கிறது கொரோனா- 4 பேர் பலி

November 07, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நால்வர், சற்றுமுன்னர் மரணமடைந்துள்ளனர்.

அந்த நால்வருடன் சேர்த்து, கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஐவர் மரணமடைந்தனர். அவர்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

அதேபோல, இன்றையதினம் மரணித்த நால்வரில் மூவர் பெண்கள் ஆவர்.

அதிலும் மூன்று பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள். மற்றையவர் கம்பஹா மாவட்டத்தில், கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.