Print this page

குளத்திலிருந்து ஐம்பொன் சிலைகள் சிக்கின

November 09, 2020

வட்டுக்கோட்டை, சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (8) மாலை அந்த இடத்துக்கு வந்த இராணுவத்தினர், குளத்துக்குள்ளிலிருந்து சிலைகளை வெளியில் எடுத்தனர்.

சுமார் 68 வருடங்களுக்கு முற்பட்ட முருகன், 3 மயில்கள், கலசம் ஆகிய ஐம்பொன் சிலைகளே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்தக் காலப்பகுதியில் தங்கம் அதிகளவு சேர்க்கப்படுவதால் அவற்றின் தற்போதைய பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.