Print this page

கொரோனா உயிரிழப்பு அதிரடியாக கூடியது

November 10, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்று ஆண்களும் பெண் ஒருவரும், இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த 51 வயதுடைய நபரொருவர் கடந்த 07 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுடன் நியுமோனியா காரணமாக இவரது மரணம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட சுவாச கோளாறு மரணத்திற்கான காரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 09 ஆம் திகதி கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுடன் நியுமோனியா ஏற்பட்ட காரணத்தால் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த 55-60 வயதுக்கு இடைப்பட்ட ஆண் ஒருவருக்கு கடந்த 08 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Tuesday, 10 November 2020 12:17