Print this page

அவசரமாக அம்பியூலஸ் தேவையா?

November 11, 2020

தனிமைப்படுத்தல் பகுதிகளிலுள்ளவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்படும் பட்சத்தில், அம்பியூலன்ஸ் உதவிகளுக்காக 0113422558 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவிப்புக்கமைய, இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், கொவிட் தொற்றாளர் மேற்படி சேவையை துரிதமாக பெற்றுக்கொள்ள முடியுமெனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.