Print this page

தாழப்பறக்கும் ஹெலிகளால் மக்கள் அச்சம்

November 12, 2020

கொழும்பு-15 மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக ஹொலிகொப்டர்கள் பயணிப்பதை அடுத்து, பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பல ஹொலிகொப்டர்கள் மிகவும் கீழாக தொடர்ந்தும் பறப்பதை காண முடிகின்றது.

ஏன் ஹொலிகொப்டர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக பயணிக்கின்றன என்பது குறித்து விமானப்படை ஊடகப் பிரிவு கருத்துரைத்துள்ளது,

தனிமைப்படுத்தல் பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, அது தொடர்பில் ஆராய்வதற்காகவே ஹொலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஏதேனும், சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின், அது தொடர்பில் உரிய தரப்பிற்கு அறிவிக்க விமானப்படை நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஹொலிகொப்டர்களுக்கு மேலதிகமாக, விமானப்படைக்கு சொந்தமான மூன்று ட்ரோன் குழுக்களும் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

ஹொலிகொப்டர்கள் கீழ் வானில் பறப்பதை எண்ணி, மக்கள் அச்சப்பட தேவையில்லை என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.