Print this page

புலி தடையை நீக்கக்கூடாது; இந்தியா

November 13, 2020

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின்  பட்டியலில் இருந்து  நீக்கக்கூடாது என்று இந்தியா பிரிட்டனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2000 ஆம் ஆண்டளவில் பிரிட்டன் தமிழீழ  விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்தது.

எனினும் யுத்தம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இலங்கையில் எந்த விதமான வன்முறைகளும் இடம்பெறாததையடுத்தும் புலிகள் அமைப்பின் தடையை நீக்க வேண்டும் என்ற கோரப்பட்டது.

இந்த நிலையிலேயே புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்கவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சும் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்கக்கூடாதென இந்தியா. பிரிட்டிஷ் உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் ஜனாதிபதி ஆர் . பிரேமதாஸ ஆகியோரின் படுகொலைகளுக்க புலிகளே காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Last modified on Friday, 13 November 2020 06:56