Print this page

3 எம்.பிக்களுக்கும் “கொரோனா தடை”

November 13, 2020

வெலிக்கடை, மெகஸின் உள்ளிட்ட சிறைச்சாலைகளில்  இருக்கும் கைதிகளான எம்.பிக்களை, சபைக்குள் அழைத்து வராமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஆளும் கட்சியின் எம்.பிக்களான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரேமலால் ஜயசேகர மற்றும் எதிர்க்கட்சி எம்.பியான ரிஷாட் பதியூதீன் ஆகிய மூவரையும் சபைக்குள் அழைத்து வராமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது,

சிறைச்சாலைகளில் ​கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையால், இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

Last modified on Friday, 13 November 2020 06:54