Print this page

லொஸ்லியாவின் தந்தை மரணம்: பூதவுடல் இலங்கை வருகிறது?

November 16, 2020

பிக்போஸ் நிகழ்ச்சியின் பிரபலமும், தென்னிந்திய நடிகையுமான லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

கனடாவிலுள்ள தனது வீட்டில் வைத்து நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார் என லொஸ்லியாவின் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழப்புக்கு மாரடைப்பே  காரணம் என உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

மாரியநேசனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையிலுள்ள அவரது சொந்த ஊரில் இறுதிக் கிரியைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.