Print this page

கல்லாறு காடழிப்பு சட்டவிரோதம்

November 16, 2020

கல்லாறு வனப்பகுதியில் அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக அவரது செலவில் புதிய மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில்  அமைந்துள்ள வனப்பகுதியை அழித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில்  அமைந்துள்ள வனப்பகுதியை அழித்தமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) தீர்ப்பளித்துள்ளது.