Print this page

'நான் அவள் இல்லை'

November 16, 2020

கொழும்பு, தாமரை தடாகம் அருகே வாகன காட்சியறையில் மோதிய சொகுசு காரினை தான் செலுத்தவில்லை என, என விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்த யுவதி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் வெளியான புகைப்படங்களில் இருந்த, சிட்னி விக்ரமநாயக்க என்ற யுவதியே இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.

“சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தி பொய்யானது. வாகனத்தை  நான் செலுத்தவில்லை. எனது தந்தை பொலிஸ் அதிகாரி கிடையாது. எனக்கு அண்ணன் ஒருவர் கிடையாது.  எனது நண்பர்களே விபத்தை எதிர்கொண்டனர். உதவிக்காகவே நான் அங்கு சென்றேன்” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தை எதிர்கொண்டவர் எஸ்.எஸ்.பி. பிரதீப் ரத்நாயக்க என்பவரின் மகள் என்றும் இந்த படத்தில் உள்ளவர் அவரது நண்பி என்றும் சிட்னி விக்ரமநாயக்க என்ற யுவதி தனது முகப்புத்தக்கத்தில் பதிவிட்டுள்ளார்.