Print this page

பாடசாலைகள் எப்போது ஆரம்பம்?

November 16, 2020

பாடசாலைகளை எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் திறப்பது குறித்து இன்னும் இறுதிமுடிவை எடுக்கவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை காலை நடந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர், “தற்போது உள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக கல்விமான்கள், மருத்துவத்துறையினருடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னரே இறுதித்தீர்மானம் எடுக்கப்படும்” என்று கல்வி அமைச்சர் கூறினார்.