Print this page

தப்பிய கைதி ‘வாழைக்குள்’ சிக்கினார்

November 18, 2020

போகம்பர பழைய சிறைச்சாலையிலிருந்து இன்று அதிகாலை தப்பிச் சென்ற கைதி  மாலை 3 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என கண்டி பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையிலிருந்து 20 அடி உயரமான மதிலில் ஏறி தப்பிச் சென்ற குறித்த கைதி, ரயில் தண்டவாளத்துக்கு அருகிலுள்ள கல்வி திணைக்களத்துக்குரிய அலுவலக வளாகத்திருக்கும் வாழை மரங்களுக்கிடையில் மறைந்திருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்வி திணைக்கள பணியாளர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்தே, கைதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதிகாலை 12 மணிக்கு சிறையிலிருந்து தப்பிச் சென்ற இக்கைதி, 15 மணித்தியாலங்கள் அதே இடத்தில் மறைந்திருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.