Print this page

முடக்கப்பட்ட பகுதிகள் வார இறுதியில் விடுவிப்பு?

November 19, 2020

தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகளை விடுவிப்பதா இல்லையா  என்பது குறித்த தீர்மானம், வார இறுதியில் எடுக்கப்படுமென, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முடக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து  தினமும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இந்நிலையில் வார இறுதியில் மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வுக்கு அமைய, முடக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து முடக்க நிலையில் வைத்துக்கொள்வதா? அல்லது அவற்றை விடுப்பதா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதி அவதானத்துக்குரிய பகுதி எனின், அதனை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.