Print this page

எல்.பி.எல் வீரருக்கு கொரோனா

November 19, 2020

எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் இலங்கை பிறீமியர் லீக் (எல்.பி.எல்) போட்டிக்கு வந்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

கொழும்பு கிங்ஸ் அணியின் வீரருக்கே கொரோனா வைரஸ் உறுதியானது. இவர், நேற்றையதினம் நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.

அவர், ஹம்பாந்தோட்டையில் உள்ள ஷங்கரில்லா ​ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வீரர் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last modified on Thursday, 19 November 2020 15:45