Print this page

சிறுமிக்கு மர்மஉறுப்பை காட்டிய நபர்

November 20, 2020

விகாரையொன்று முன்னால் சிறுமிக்கு தனது மர்ம உறுப்பினை காட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அந்த நபரின் நடவடிக்கைகள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளதுடன், அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன.

குறித்த வீடியோவில், மோட்டார் சைக்கிளில் வரும் நபரொருவர் வழிபடுபவர் போல பாவனை காட்டுவதுடன், அங்கு வரும் சிறுமியிடம் தனது மர்ம உறுப்பினை காண்பிக்கின்றார்.

இதனை கண்டு சிறுமி அதிர்ச்சியடைந்த நிலையில், எதிர்புறமாக உள்ள இளைஞர் குறித்த நபரை திட்டிய நிலையில், குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்கின்றார்.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து ஆராய்வதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் கூறியுள்ளார்.

அத்துடன், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் குறித்த வீடியோவில் உள்ள நபரை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.